கோவிலில் சாமி கும்பிடுவதில் மோதல்

தீவட்டிபட்டி அருகே கோவிலில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட மோதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-05-05 07:58 GMT
கோவிலில் சாமி கும்பிடுவதில் மோதல்

தீவட்டிபட்டி அருகே கோவிலில் சாமி கும்பிடுவதில் ஏற்பட்ட மோதலில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


  • whatsapp icon
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் உள்ள பெரிய மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிடுவது தொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே நேற்று 3-வது நாளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நேற்று கடைகள் திறக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக நாச்சினம்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே தீவட்டிப்பட்டியில் நடந்த கலவரம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News