கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

Update: 2024-04-15 11:24 GMT

விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நடைப்பயிற்சி மேற்கொண்டுள்ள பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பு விளையாட்டு அரங்கில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் 10 ஆண்டுகால மத்திய அரசின் அவலங்களை எடுத்துக் கூறி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஓசூர் பகுதியை சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோபிநாத் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்குவதற்கு குறைந்த நாட்களே இருப்பதால் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வாக்கு சேகரிக்கும் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வாக்கு சேகரித்து வருகிறார் இந்நிலையில் கிருஷ்ணகிரி விளையாட்டு அரங்கில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களிடம் காங்கிரஸ் ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறியும் தேர்தல் அறிக்கைகள் குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கி கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையிலான நல்லாட்சி அமைய உங்களுடைய வாக்கினை கைச்சின்னத்திற்கு வாக்கு அளித்து வெற்றி பெற செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார் இந்த நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகப்பவாணன், நகரத் தலைவர் முபாரக், லலித் ஆண்டனி, மாவட்டத் துணைத் தலைவர் ரஹமத்துல்லா, முன்னாள் மாவட்ட தலைவர் நாராயணமூர்த்தி கிருஷ்ணமூர்த்தி வட்டாரத் தலைவர் சித்திக் ரமேஷ் அர்னால்ட் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News