சாத்தூர் பெரியபள்ளி வாசலில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சாத்தூர் பெரிய பள்ளி வாசலுக்கு சென்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இஸ்லாமிய மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-05 14:33 GMT
இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர்

தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சியினர் வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மாணிக்கம் தாகூர் சாத்தூர் பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் மேலும் சாத்தூரில் உள்ள பெரிய பள்ளி வாசலுக்கு சென்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் இஸ்லாமிய மக்களிடம் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பின்னர் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டார்.

அப்போது இஸ்லாமிய மக்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர் மகாத்மா காந்தி நேரு, காமராஜர், மௌலானா ஆசாத் ஆகியோர் கனவு கண்ட இந்தியா எல்லோருக்கும் சமமான இந்தியா எனவும் மதத்தாலும் மொழியாலும்,

உணவாக இருந்தாலும், உடையாக இருந்தாலும் அவற்றையெல்லாம் மதித்து ஒரு அமைதியான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று நினைத்தார்கள் ஆனால் ஒரு சில இயக்கங்கள் மட்டும் இந்தியா ஒரு மதம் சார்ந்தவர்களுக்கு மட்டும், ஒரு உடை சார்ந்தவர்களுக்கு மட்டும், ஒரு சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கு மட்டும், ஒரு மொழி பேசுபவர்களுக்கு மட்டும் சாதகமாக நடக்கிறது என தெரிவித்த மாணிக்கம் தாகூர் அது உண்மையான இந்தியாவாக இருக்க முடியாது என்றார்.

அதனால் இப்போது இருக்கின்ற இந்த சூழ்நிலை வெறுப்பு அரசியலை உருவாக்குகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் மேலும் அன்பான பாசமான அரசியலை உருவாக்க வேண்டும், சகோதரத்துவத்தை வளர்க்க வேண்டும், எல்லா மதங்களும் அதையே சொல்கிறது,

நமது நம்பிக்கைகளையும் மற்றவர் களுடைய நம்பிக்கையும் மதிப்பவர் கள் தான் உண்மையான மனிதனாக இருக்க முடியும், அவர் தான் உண்மையான இந்தியனாக இருக்க முடியும். ஆனால் சிலர் அப்படி இருப்பதில்லை,அப்படிப்பட்ட சிலரிடம் தான் தற்போது அதிகாரம் சிக்கி உள்ளது .அவர்களிடமிருந்து இந்தியா மீட்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் அதற்கு உங்களுடைய பிரார்த்தனையும் தேவை இந்தியா உண்மையான காந்தி,நேரு, காமராஜர், மௌலானா ஆசாத் அவர்களுடைய இந்தியா வாகவும் இருக்க வேண்டும், அனைத்து சகோதர , சகோதரிகளும் பாதுகாப்பாகவும் ,அதே மதிப்போடும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும் பயமில்லாத இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதுதான் என் அன்பு தலைவர் ராகுல் காந்தியின் விருப்பமாக உள்ளது.

அதையே அவர் பாரத பயணமாக கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் வரை நடந்து சென்றார், அன்பையும் பாசத்தையும் பகிர்ந்தார், ஒவ்வொரு சகோதரரிடம் கை கொடுத்தார். அவருடைய அந்த அன்பும் பாசமும் கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கு உங்களிடம் ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன் என்றார். மேலும் வேற்றுமை வரவிடாமலும் வெறுப்பு அரசியல் தமிழ்நாட்டுக்கு வரவிடாமலும் காப்போம் என பேசினார்

Tags:    

Similar News