தேவருக்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் வேட்பாளர்

திருநெல்வேலி பாராளுமன்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2024-04-07 04:34 GMT

தேவர் சிலைக்கு மரியாதை

திருநெல்வேலி பாராளுமன்ற திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவர் நேற்று (ஏப்.6) பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது அங்குள்ள முத்துராமலிங்க தேவர் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்,மாநகராட்சி துணை மேயர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News