காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
Update: 2024-02-06 07:34 GMT
அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது. மாவட்ட தலைவர் சங்கர் தலைமையில் நடைப்பெற்ற ஆலோசனை கூட்டத்தில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் திடலில் பிப்ரவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்திலிருந்து ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் ரயில் கட்டண உயர்வு மற்றும் அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. இதில் நகர தலைவர் மாமு. சிவக்குமார் உள்ளிட்ட அக்கட்சியின் மாவட்ட, வட்டார, நகர மற்றும் மகளிரணி பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.