வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சேலத்தில் வங்கி கணக்குகளை முடக்கிய மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-20 05:56 GMT
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸ் வங்கி கணக்குகளை முடக்கியதாக கூறி, மத்திய அரசை கண்டித்து சேலம் செவ்வாய்பேட்டை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு நேற்று மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர பொருளாளர் தாரை ராஜகணபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பச்சப்பட்டி பழனிசாமி, திருமுருகன், மாநகர துணைத்தலைவர் ஈஸ்வரி வரதராஜன், மனித உரிமை துறை மாநில இணை செயலாளர் நிஜாம், விவசாய பிரிவு நிர்வாகி சிவக்குமார், மண்டல தலைவர்கள் சாந்தமூர்த்தி, நிஷார் அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காங்கிரஸ் கட்சியின்வங்கி கணக்குகளை செயல்படுத்த முடியாத வகையில் முடக்கப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.