கருப்பு கொடியுடன் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிரதமர் மோடி தமிழக வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடியுடன் திண்டுக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
Update: 2024-05-30 12:31 GMT
போராட்டம்
கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திண்டுக்கல் மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்ல முயன்ற மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டனை போலீசார் சுற்றி வளைத்தனர். இதில் பங்கேற்ற மண்டல தலைவர் கார்த்திக், வேங்கை ராஜா உள்பட 50க்கும் மேற்பட்டோரை நகர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.