மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Update: 2023-11-15 09:40 GMT

ஆர்ப்பாட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு படிப்படியாக முடக்கி வருவதை கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சியின் மாநில தலைவர் அழகிரி உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பாக திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் முன்பு நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் சர்வேயர் செல்வகுமார் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், அம்பானிக்கும் அதானிக்கும் பல்லாயிரம் கோடிகளை விட்டுக் கொடுக்கும் பாஜக அரசு, காங்கிரஸ் அரசு கொண்டுவந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை ஒழிக்க நினைக்கிறது என பல்வேறு முழக்கங்களை பாஜக அரசுக்கு எதிராக எழுப்பினர், இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்

Tags:    

Similar News