உபி பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநில பாஜக அரசு மற்றும் மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-03 03:14 GMT
 கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் தென்காசி காங்கிரஸ் கமிட்டி  எஸ்சி, எஸ்டி அணி சார்பில் உபியில் பட்டியலின இளைஞரை சுட்டு கொலை செய்த உபி அரசு மற்றும் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசை கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவு நிர்வாகிகள் முன்னிலையில் மகளிரணி சேர்மக்கனி, ராஜீவ் காந்தி, சேர்ந்தமரம் முருகையா, வக்கீல் ரமேஷ், உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News