புனிதா அந்தோனியார் ஆலய புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா

குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-05-02 07:39 GMT

குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா நடைபெற்றது.


கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே திருவரம்பு - குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதுகாவலர் திருவிழா கொடியேற்று மற்றும் புதுப்பிக்கப்பட்ட பீடம் அர்ச்சிப்பு விழா ஆகியன நடைபெற்றது இதில் பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் கலந்து கொண்டு பீடர் அர்ச்சிப்பை துவக்கி வைத்தார்.தொடர்ந்து பாதுகாவலர் விழாவுக்காக திருக்கொடி ஏற்றப்பட்டது.

புத்தன்கடை வட்டார முதல்வர் பேரருட்பணியாளர் எல். பென்னி, குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய பங்கு அருட்பணி பேரவை தலைவர் அருட்பணியாளர் எ . ஒய்சிலின் சேவியர், துணைத் தலைவர் ஏ.எம். மெற்றில்டா சதீஷ்குமார் , செயலர் ஏ.எல்.மேரி ரெஜினாள், பொருளர் ஏ. மைக்கேல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மறைமாவட்ட அருட்பணியாளர்கள் மற்றும் முன்னாள் பங்கு அருட்பணியாளர்கள்,பங்கு அருட்பணிப்பேரவை, கட்டடக்குழு அன்பியங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

விழாவில் அழகியமண்டபம் அனுகிரஹா தொண்டு நிறுவன தலைவர் ஏ. சதீஷ் குமார், ஏ.ஹேமா மைக்கேல்ராஜ், பிலோமினாள் பிரான்சிஸ், எஃப்.ஜெகன், சி. சுனில், செபஸ்தியான், எஸ்.எல்.ஷெரின் பிரகாஷ், எஸ். எல்.ஷெரித் பிரகாஷ், ,பிரான்சிஸ் ஜோய், அரசு, ஹேமா மொறாஸ், டால்வின் ஷீமா, அலோசியஸ் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வரும் 5ம் தேதி வரை திருவிழா நடக்கிறது. 5. ம் தேதி காலை அருட்பணியாளர் ஜெயப்பிரகாஷ் அருளுரையுடன் திருப்பலிக்கொண்டாட்டம் மதியம் 12.30 மணிக்கு திருத்தேர் பவனி, கொடியிறக்குதல் ஆகியன நடைபெறுகிறது.ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் ஒய்சிலின் சேவியர் தலைமையில் பங்கு அருட்பணிபேரைவயினர், பங்கு அருட்சகோதரிகள், பங்கு இறைமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News