தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை
ஆலங்குளம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.;
Update: 2024-04-08 08:55 GMT
ஆலங்குளம் அருகே கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரதிஷ்டை பண்டிகை நடந்தது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுச்சுரண்டை கிறிஸ்தவ தேவாலயத்தில் 98வது பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை நேற்று இரவு நடைபெற்றது. இந்த பண்டிகைக்கு சேகர தலைவர் ஜெகன் தலைமை வகித்தார். சபை ஊழியர் ஜாண் முன்னிலை வகித்தார். விஷ்வவாணி இயக்க நிர்வாக இயக்குனர் வில்சன் ஞானகுமார் சிறப்பு செய்தியளித்து ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அன்னப்பிரகாசம், ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ஸ்டீபன் ஜெபராஜா உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.