காவலர் பணிக்கு நேர்காணல்: ராமநாதபுரம் எஸ்பி தகவல்
ராமநாதபுரம் சிவகங்கை மாவட்டங்களை 2023- ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கான நேர்காணல் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 2023-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 737 ஆண் விண்ணப்ப தாரர்களுக்கு இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு மைதானத்தில் சேதுபதி சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் மற்றும் உடற்தகுதித் தேர்வு வருகின்ற 06.02.2024-ஆம் தேதி முதல் காலை 06.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
உடற்திறன் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அழைப்புக் கடிதம் (Call Letters) புகைப்படம் மற்றும் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும் என்றும், விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்திற்கு வர வேண்டும் என்றும் மைதானத்திற்குள் செல்போன் கொண்டுவர கண்டிப்பாக அனுமதி இல்லை என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.