பெரம்பலூர் : பொக்குனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி தொடக்கம்

நீர்வளத் துறையின் சார்பில் லாடபுரம் பகுதியில் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூபாய் 176. 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தடுப்பணை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Update: 2024-02-10 01:41 GMT

தடுப்பணை கட்டும் பணி துவக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் 33 அணைக்கட்டுகள் மற்றும் 2 நீர்த்தேக்கங்கள் உள்ளன. கடந்த 29.03.2023ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் நீர்ப்பாசனத்துறை கோரிக்கையின் போது . நீர்பாசனத்துறை அமைச்சர் பெரம்பலூர் வட்டம், இலாடபுரம் கிராமத்தில் பொக்குனி ஆற்றின் குறுக்கே ரூ.176.60 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியை அறிவித்தார்.

அறிவிப்பினை தொடர்ந்து 11.09.2023ம் தேதி அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பிப்ரவரி 9ம் தேதி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம்,. , பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் புதிய தடுப்பணை கட்டும் பணிகளை தொடங்கி வைத்தனர். இலாடபுரம் கிராமத்தில் உள்ள கோனேரி பொக்குனி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்க படுவதால் பொக்குனி ஆற்றின் நீரானது வீணாவதை தடுப்பதுடன், தடுப்பணை சுற்றியுள்ள பகுதியில் 76 கிணறுகள் நீர் மட்டம் உயர்ந்து மறைமுக ஆயக்கட்டு 315.20 ஏக்கர் விவசாய நிலங்கள்பயனடைவதுடன் குடிநீர் ஆதாரமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி செயற்பொறியாளர் சரவணன். உதவிப்பொறியாளார் மருதமுத்து, லாடபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் சாவித்திரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News