சோழன் நகரில் 45 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி
அரவக்குறிச்சி சோழன் நகரில் 45 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி;
Update: 2023-12-21 11:44 GMT
பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை
சோழன் நகரில் 45 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட சோழன் நகரில் ரூபாய் 45 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த பூமி பூஜை விழாவில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ. இந்த நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், அரவக்குறிச்சி பேரூர் கழக நகர செயலாளர் பிஎஸ் மணி, உள்ளாட்சி பிரதிநிதிகள், அப்பகுதியைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பூமி பூஜை விழாவை சிறப்பித்தனர்.