அமராவதி ஆற்றங்கரையில் பேரிக்கார்டுகள் அமைக்கும் பணி நிறைவு

கரூரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு அமராவதி ஆற்றில் பாதுகாப்பு கருதி பேரிக்கார்டுகள் அமைக்கும் பணி நிறைவடைந்தன.

Update: 2024-05-29 13:16 GMT

 கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது. மாரியம்மன் கோவிலில் இருந்து கம்பம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அமராவதி ஆற்றில் விடுவது வழக்கம். இதற்காக இன்று கரூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் பொது விடுமுறை நாள் என அறிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறும் இந்த கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

மேலும் அமராவதி ஆற்றில் வானவேடிக்கை நிகழ்வுகளும் நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அமராவதி ஆற்றில் கூட வாய்ப்புள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்புக்காக காவல்துறையினர் பேரிக்கார்டுகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இன்று இரவு நடைபெறும் நிகழ்ச்சிக்காக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை விழா கமிட்டி மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News