வெள்ள கண்காணிப்பு சாலை அமைக்கும் பணி துவக்கம்

கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் வெள்ள கண்காணிப்பு சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-23 01:13 GMT

கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் வெள்ள கண்காணிப்பு சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் மற்றும் சிதம்பரம் வட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றின் இடது கரையில் நீர்வளத்துறை மூலம் வெள்ள கண்காணிப்பு சாலை அமைக்கும் பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் ம.சிந்தனைச்செல்வன், சிதம்பரம் சார் ஆட்சியர் ரஷ்மி ராணி, மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

Similar News