உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் துவக்கம்

காயல்பட்டனத்தில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் ரூ.1.5கோடி நிதி பங்களிப்புடன் கடம்பா வடிகாலில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது. 

Update: 2024-03-16 01:27 GMT

காயல்பட்டனத்தில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் ரூ.1.5கோடி நிதி பங்களிப்புடன் கடம்பா வடிகாலில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் துவங்கியது.


சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனமும், சிறிய அளவு மற்றும் ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்கமும் இணைந்து காயல்பட்டணம் வடபாகம் கடம்பா வடிகாலில் உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி.சீனிவாசன் முன்னிலையில், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பாரமறிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர். ராதகிருஷ்ணன் பணிகளை துவக்கி வைத்தார். 

இதில், ரூ.1.5கோடி மதிபீட்டில் டிசிடபிள்யூ நிறுவனத்தின் பங்களிப்பின் முலம் இப்பாலம் கட்டப்பட உள்ளது. இவ்விழாவில் பொதுப்பணி துறை செயற் பொறியாளர் வசந்தி, உதவி செயற் பொறியாளர் ஆதிமுலம், திருச்செந்துார் நகரசபை துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், ஆறுமுகநேரி பேருராட்சி தலைவர் கல்யாண சுந்தரம், ஆத்தூர் பேருராட்சி தலைவர் கமாலுத்தீன், நல்லுார் பஞ்சாயத்து தலைவர் பரிசமுத்து, ஆத்தூர் விவாசாயிகள் சங்க உறுப்பினர்கள், சிறிய அளவு மற்றும் ஐக்கிய உப்பு உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News