சிவகாசியில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி

சிவகாசியில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2024-06-15 10:57 GMT

சிவகாசியில் இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


சிவகாசி ரயில்வே கேட்டில் அதிகாரிகள் ஆய்வு விரைவில் மேம்பாலம் பணிகள் தொடங்க நடவடிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்-சாட்சியாபுரம் ரயில்வே கேட்டில் அதிகாரிகள் ஆய்வு.சிவகாசி-திருத்தங்கல் ரயில்வே கிராசிங், சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங் ஆகியவற்றில் மேம்பாலம் இல்லாததால் ரயில்வே கேட் மூடப்படும் போது இரு புறங்களிலும் 2 கிலோ மீட்டருக்கு மேல் வாகனங்கள் நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாட்சியாபுரம்,திருத்தங்கலில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். சிவகாசி,திருத்தங்கல் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க 2021ல் ஒப்புதல் வழங்கப்பட்டது.சிவகாசி இரட்டை பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் வரை ரூ.60 கோடி மதிப்பில் 700 மீட்டர் நீளம்,12 அடி அகலத்தில் சுரங்கப்பாதையுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டது.நிலத்தை கையகப்படுத்தும் பணி நிறைவு பெற்றது.

இந்தப் பணிக்காக ரூ.10 கோடியை அரசு ஒதுக்கீடு செய்த நிலையில்,கடந்த 3 மாதங்களுக்கு முன் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.அடிக்கல் நட்டப்பட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் பணிகள் தொடங்கப்படவில்லை. சாட்சியாபுரம் ரயில்வே கேட் பகுதியில் எம்எல்ஏ அசோகன், மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

Tags:    

Similar News