அழகாபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி

அழகாபுரம் பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அருள் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-05-18 09:33 GMT

எம்எல்ஏ ஆய்வு

சேலம் அழகாபுரம் பகுதியில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே மழைநீர் வடிகால் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அருள் எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசினார். இதையடுத்து உங்கள் முதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியது.

இதையடுத்து தோப்புக்காடு முதல் அழகாபுரம் முருகன் கோவில் வழியாக புதிய பஸ் நிலையம் வரை 3½ மீட்டர் அகலத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை அருள் எம்.எல்.ஏ. நேரில் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்குமாறு கூறினார்.

அப்போது பா.ம.க. பகுதி செயலாளர் ஏ.கே.நடராஜன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வேல்முருகன், கோட்ட செயலாளர் ராஜசேகர், பாலாஜி, கவுதம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News