பழையபேட்டையில் அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கம்

பழையபேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது.

Update: 2024-02-27 06:43 GMT
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் அரூர் பஞ்சாயத்து டவுன் உட்பட்ட பழையபேட்டையிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 7 லட்சம் ரூபாய் மதிப்பில், சுற்றுச்சுவர் கட்டும் பணிக்கு பூமி பூஜை விழா நடைபெற்றது இந்த விழாவிற்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சுற்றுச்சுவர் கட்டும் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு தலைவர் பொன்மலர், தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, நகர செயலாளர் பாபு, நிர்வாகிகள் சிவன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News