ஏரியில் கட்டட கழிவு குவிப்பு - சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
ஏரியில் கட்டட கழிவு குவிப்பால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி அடைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.
Update: 2024-02-22 15:41 GMT
சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம் 155வது வார்டில், 27 ஏக்கர் பரப்பளவில் ராமாபுரம் ஏரி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பால், 3 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கி உள்ளது. இந்த ஏரி ஆக்கிரமிப்பு குறித்து, நம் நாளிதழில் தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த ஏரியின் இன்னொரு பகுதியில், புதர்மண்டி காலியாக உள்ளது. இப்பகுதியில் குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதன் அருகே, ராமாபுரம் பாரதி சாலையோரம் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, இந்த பகுதியில் கொட்டப்படும் கட்டட கழிவுகளை அப்புறப்படுத்தி, மக்களுக்கு பயன்படும் விதமாக நிலத்தை மாற்றி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.