17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் : கட்டிடத் தொழிலாளி கைது

திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் பகுதியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-26 04:53 GMT

கைதானவர்

திருப்பூர் மாவட்டம் , தாராபுரம் அடுத்த தேர்பட்டி கிராமத்தில் கணவனை இழந்த விஜயா என்பவர் அவரது 17-வயது மகளுடன் குடியிருந்துகொண்டு கூலிவேலைக்கு சென்றுவந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான சிவகுமார்(எ)சிவா (38) கடந்த 25.12.2023 தேதி விஜயா வீட்டிற்கு சென்று சித்தாள் வேலைக்கு ஆள் வேண்டும் எனகூறி விஜயாவின் 17-வயது மகளை அழைத்து சென்று சிறுமியுடன் பழகி வந்த நிலையில் இதனை அறிந்த சிறுமியின் தாய் தேர்பட்டி பகுதியில் இருந்து சின்னக்காம்பாளையம் பகுதிக்கு தனது விஜயாவின் தாய் வீட்டின் அருகே வீட்டை மாற்றினார்.

விஜயா வீட்டில் இல்லாத நேரம் பார்த்து சிவகுமார் அடிக்கடி சென்று சிறுமியை பலாத்காரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமிக்கு கடந்த 16.05.24 வயிற்று வலியாக இருந்ததால் தாராபுரம் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவர் ஸ்கேனுக்கு எழுதிக்கொடுத்ததின் பேரில்16.5.24-ம் தேதி தனியார் ஸ்கேன் சென்டர் சென்று, ஸ்கேன் செய்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறி ரிப்போர்ட் கொடுக்காமல் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார்கள். சிறுமி கர்ப்பமாக இருப்பதாக சிவாவிடம் சொல்ல, யார் காரணம் என்று கேட்டால் என்னை சொல்லக்கூடாது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து போன சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த எனது மச்சினன் மகன் கரண்குமார் தான் காரணம் என்று சொன்னால் உன்னையும் உன் அம்மா வேயயும் சொல்ல வேண்டும், இல்லையென்றால் உன்னையும் உன் அம்மாவையயும் கொன்னுவிடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

அதனால் நான் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லவில்லை. 22.05.2024-ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது மருத்துவர் சிறுமியை பரிசோதித்து விட்டு கர்ப்பமாக இருப்பதாக கூறி யார் காரணம் என்று கேட்க சிவா மிரட்டி சொல்ல கொடுத்தபடி மருத்துவமனையில் கரன் பெயரையும், ஆதாரில் உள்ள எனது பாட்டி வீட்டு முகவரியையும், மாற்றி சொல்லிவிட்டேன்.

சிறுமி கர்ப்பமாக இருக்கும் தகவல் தெரிந்து கொண்ட போலீசார் விசாரிக்கும் போது, நான் கரண்குமார் தான் காரணம் என்று திரும்ப திரும்ப சொல்லிவிட்டு இடையில் மருத்துவ பரிசோனைக்கு சென்றுவிட்டு பின்பு . அன்று 23.05.2024 தேதி மாலையில் நடந்ததை சொல்லி, மேற்படி என்னை கட்டயாப்படுத்தி பல முறை உடலுறவு கொண்டு கர்ப்பமாக்கி, மிரட்டிய தேர்பட்டி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் சிவா என்கின்ற சிவகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிவகுமாரை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News