கட்டிடத் தொழிலாளி தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே நோயால் அவதிப்பட்டு வந்த கட்டிட தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

Update: 2024-04-22 13:20 GMT

தற்கொலை 

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டல் பிரபு. கட்டிடத்தொழிலாளி. இவருக்கு மனைவியும், மகளும் உள்ளனர். மகள் திருமணம் முடித்து வெளி ஊரில் தங்கி வருகிறார்.கிறிஸ்டல் பிரபு மற்றும் அவரது மனைவியும் குடும்ப வீட்டில் வசித்து வருகின்றனர். கிறிஸ்டல் பிரபு நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.

மேலும் அவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் அவர் அதிகமாக மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலை கிறிஸ்டல் பிரபு விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த டாக்டர் கிறிஸ்டல் பிரபு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News