கட்டுமான தொழிலாளி பலி!

கட்டுமான பணியின் போது மண் சரிந்து ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.

Update: 2024-03-13 10:33 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி மரவியல் பூங்கா அருகே 30 அடி தடுப்புச் சுவர் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த ஜார்க்கண்ட் மாநில தொழிலாளிகள் ஜாகிர் 25, ரிஸ்வான் 22, ஆகியோர் திடீரென ஏற்பட்ட மண் சரிவில் சிக்கினர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மீட்பு பணியில் கால்கள் இரண்டும் மண்ணில் புதைந்திருந்த ‌ஜாகிர் என்பவர் வெளி காயங்கள் ஏதும் இன்றி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். முழுவதுமாக மண்ணில் புதைந்திருந்த ரிஸ்வானை சுயநினைவு இல்லாத நிலையில் மீட்டு ஊட்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்திரவடிவேல் ஆய்வு செய்தார். இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் ஊட்டி கோட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில் முறையான அனுமதி பெறாமல் கட்டுமான பணிகள் நடந்த நிலையில் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இடத்தின் உரிமையாளரை காவல்துறையினர் விசாரித்தனர். குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம் 7ம் தேதி லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்பு சுவர் கட்டுமான பணி என்பது மண் சரிவு ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி உயிரிழந்தது உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌.
Tags:    

Similar News