கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் வெப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்ட கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில், வெப்படை நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்ட தலைவர் எம்.அசோகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார் . இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.10,000 போனஸாக வழங்கிட வேண்டும்.
நலவாரிய ஆன்லைன் குளறுபடிகளை சரி செய்து விட வேண்டும்.ஆன்லைன் மற்றும் நேரடியாக விண்ணப்பங்கள் பெற்று உடனடியாக உதவி திட்டங்களை வழங்கிட வேண்டும்! பெண் தொழிலாளர்களுக்கு 55 வது வயதில் பென்ஷன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி நிறைவுறையாற்றினார் . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் எம்.ஆர்.முருகேசன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் கண்ணையன் , கிளை பொருளாளர் கோவிந்தராஜ், வெப்படை கிளை நிர்வாகிகள் பழனிச்சாமி, கந்தாயி மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்..