திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்
திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-30 14:58 GMT
திமுக ஆலோசனை கூட்டம்
திருவாரூர் திமுக நகர கழக அலுவலகத்தில் இளைஞர் அணி அவசர ஆலோசனை கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலத்தில் இளைஞர் அணி மாநில மாநாட்டில் பங்கேற்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 மேற்பட்ட இளைஞர்கள் எழுச்சியுடன் மாநாட்டில் பங்கேற்பது என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் பனங்குடி குமார் ,திமுக நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.