சனிக்கிழமை திமுக முகவர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

தர்மபுரி, பென்னாகரம் மற்றும் மேட்டூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக (1ம்தேதி) நடக்கிறது.;

Update: 2024-05-30 06:18 GMT

பைல் படம்

தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில், தர்மபுரி, பென்னாகரம் மற்றும் மேட்டூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், காணொலிக்காட்சி வாயிலாக (1ம்தேதி) நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,தர்மபுரி கிழக்கு மாவட்டத்தில் தர்மபுரி, பென்னாகரம் மற்றும் மேட்டூர் நாடாளுமன்றத் தொகுதிகளில், பதிவான வாக்குகள் எண்ணுவதை கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் முகவர்களுக்கான கலந்தாலோசனை கூட்டம், வரும் 1ம்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி அளவில் மாவட்ட திமுக அலுவலகத்தில் காணொலிக் காட்சி வாயிலாக நடை பெற உள்ளது.

Advertisement

இதில், 4ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு, திமுக வேட்பாளர்களின் வாக்கு எண்ணும் முகவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்தும், முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடுகள் குறித்தும்,திமுக சட்டத்துறை செயலாளர், மூத்த வழக்கறிஞர் இளங்கோ எம்பி விளக்கம் அளிக்க உள்ளார். இதில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், திமுக செயலாளர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News