சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மனித - வன விலங்கு முரண்பாடுகள் தீர்வு குறித்த ஆலோசனைக் கூட்டம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மனித - வன விலங்கு முரண்பாடுகள் தீர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2023-12-06 11:56 GMT

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மனித - வன விலங்கு முரண்பாடுகள் தீர்வு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஈரோடு மாவட்டம் ஆசனூர் வனக்கோட்ட அலுவலகத்தில் ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் சுதாகர் தலைமையில் தாளவாடி ஜீரகஹள்ளிமளம் மற்றும் ஆசனூர் ஆகிய நான்கு வனச்சரகங்கள் உள்ள பகுதிகளில் ஏற்படும் மனித விலங்கு முரண்பாடுகளை கட்டுப்படுத்துவது , தீர்வு காண்பது குறித்து பொதுமக்களிடம் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் முதன்மையான கோரிக்கையாக புதியதாக யானை புகா வண்ணம் அகழிகளை அமைக்க வேண்டும் , தூர்ந்துபோய் உள்ள யானை புகா அகழிகளை பராமரிக்க வேண்டும். சூரிய தொங்கு மின் வேலி அமைக்க வேண்டும், சாலையின் இருபுறமும் உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பதலிளத்த ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் இன்னும் வெட்டப்படாமல் உள்ள 28 கி.மீ. தூரத்திற்கு யானை புக அகழிகள் அமைக்கவும். 48 கி.தூரத்திற்கு யானை புகா அகழி பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அனுமதி பெறப்படும் என்றும், சூரிய தொங்கு மின் வேலிகளை அமைக்கவும், இரயில் தண்டவாளங்களை கொண்டு வேலிகளை அமைக்கவும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News