பொங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி குறித்த ஆலோசனைக் கூட்டம்!
பல்லடத்தில் உள்ள பொங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ள்பல்லடம் பொங்காளி அம்மன் கோவில் கும்பாபிஷேக தேதி அறிவிப்பு திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர் பகுதியில் முக்கிய கோவிலாக அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பொங்காளி அம்மன் திருக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும் இதன் கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு கோவில் கட்டுமானங்கள் புனரமைக்கப்பட்டு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இப்பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்நிலையில் இன்று பொங்காளி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள இந்து அறநிலைத்துறை அலுவலகத்தின் முன்பாக கும்பாபிஷேக தேதி அறிவிப்பு கொடுத்து ஆலோசனைக் கூட்டம் கோவில் அறங்காவலர் மோகன சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் இதர கட்சியினர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று நடைபெற்றது.
அப்போது ஏக மனதாக கோவில் பணிகள் புரைமைக்கப்பட்டு 5 12 2024 அன்று கும்பாபிஷேகம் நான்கு கால யாக பூஜை உடன் மூன்று நாள் கோலாகலமாக நடைபெற உள்ளது என இதன் அறங்காவலர் குழு தலைவர் மோகன சுந்தரம் மற்றும் கோவில் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் திமுக நகர செயலாளர் விமல் பழனிசாமி மற்றும் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆனந்தா ஸ்டோர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அறிவித்தனர்.