பழனியில் குவாரி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்புரை கூட்டம்
பழனியில் கிராவல் குவாரி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 09:07 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொழுமம்கொண்டான் ஊராட்சியில் 2.33ஹெக்டேர் பரப்பளவில் தனியார் நிறுவனம் கிராவல் குவாரி அமைத்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளிப்பது தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்டு கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய பொறியாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தாளையம் புஷ்பத்தூர், கொழுமம் கொண்டான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் குவாரி அமைப்பு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன.
இதில் கல்குவாரி அமைக்க ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துக்களை பொதுமக்கள் தெரிவித்தனர்.