அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்
சென்னையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 14 அலுவலக மன்ற கூட்ட அரங்கில், சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மண்டலம் 14-ல் உள்ளடங்கிய அனைத்து வார்டுகளிலும் அனைத்து துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் கலந்தாய்வு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் ,மண்டலம் 14-ல் உள்ளடங்கிய அனைத்து வார்டுகளிலும் நெம்மேலி குடிநீர் தங்குதடையின்றி வழங்கிட வேண்டும்.
கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பாலவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் கிழக்கு பகுதியில் நடைபெறுகிறது. அதே போல் மேற்கு பகுதியில் நடைபெறும் பணியினை வேகப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மின் அழுத்தம் குறைபாடுகள் உள்ள இடங்களில் கூடுதலாக மின்மாற்றி அமைக்க வேண்டும். அதே போல் பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றி புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.
மழை காலங்களுக்கு முன்னதாக மழைநீர் வடி கால்வாயினை சுத்தம் செய்ய வேண்டும்.மற்றும் சாலைகள் அமைக்கும் பணி நடைபெறும் போது, பொது மக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல் துரிதமான முறையில் பணி நடைபெற வேண்டுமென கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.
உடன்,சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளர்/14 வது மண்டலக் குழு தலைவர் S.V ரவிச்சந்திரன், கல்விக்குழு தலைவர் பாலவாக்கம் தா.விசுவநாதன், மாமன்ற உறுப்பினர்கள் வ.பாபு, J.K மணிகண்டன் K.P.K சதிஷ் குமார்,சிவ பிரகாசம் ஷர்மிளா தேவி திவாகர், ஷெர்லி ஜெய், சமீனா செல்வம், தமிழரசி சோமு, உள்ளிட்ட அனைவரும் உடனிருந்தனர்.