விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று முதல் துவங்குகிறது.

Update: 2024-06-24 02:41 GMT

கலந்தாய்வு 

விழுப்புரம் அரசு கல்லுாரியில் இன்று 24ம் தேதி பி.எஸ்சி., - பி.சி.ஏ., பாடப்பிரிவிற்கும், 25ம் தேதி பி.ஏ., வரலாறு, பொருளியல், 26ம் தேதி பி.காம்., - பி.ஏ., வரலாறு, பொருளியல், விண்ணப்பித்த தொழிற்பிரிவு, அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது. 27ம் தேதி பிற்பட்ட வகுப்பினர், இஸ்லாமியர், அருந்ததியர், மலைவாழ் வகுப்பினருக்கான அனைத்து பாடப்பிரிவுகள், 28ம் தேதி பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடத்திற்கும் கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் காலை 9:30 மணிக்கு முன்னதாகவே சேர்க்கை நடைபெறும் இடத்திற்கு வரவேண்டும். டவுன்லோட் செய்யப்பட்ட விண்ணப்பம், 10, 11, 12ம் வகுப்பிற்கான மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் அசல் மற்றும் இரண்டு நகல்கள், பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அடையாள அட்டை நகல்களுடன், உரிய சேர்க்கை கட்டணத்தையும் எடுத்து வர வேண்டும்.

Tags:    

Similar News