போளூரில் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை!
திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தனை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சேகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
Update: 2024-04-08 11:14 GMT
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம். எஸ். தரணிவேந்தனை ஆதரித்து போளூர் தெற்கு ஒன்றியம், கஸ்தாம்பாடி, முருகாபாடி மற்றும் R. குண்ணத்தூர் ஊராட்சிகளில் பணிக்குழு 6 ல் உள்ள பாகம் எண் 27, 28, 29 30, 103, 104, 105, 106, 166, 167, 168 உள்ள கிளை கழக செயலாளர் மற்றும் உறுப்பினர்களை சந்தித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே. வி. சேகரன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பணிக்குழு 6 மற்றும் 7 நிர்வாகிகள் உடனிருந்தனர்.