வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் !!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனை கூட்டம் வருகின்ற 3 ந்தேதி நடைபெறுகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 07:40 GMT
மு.பரஞ்ஜோதி
முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் வருகின்ற 3.6.2024, திங்கட்கிழமை மாலை 5.00மணி அளவில் பெரம்பலூர் துறைமங்கலம் தீயணைப்பு துறை அலுவலகம் அருகில் உள்ள J.K திருமண மஹாலில் நடைபெறுகிறது. அதுசமயம் திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளைச் சார்ந்த வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்ஜோதி தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.