ஜேசிஐ ஜேகாம்- எல்1 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம்

ராசிபுரம் ஜேசிஐ ஜேகாம்- எல்1 அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-23 00:52 GMT

ராசிபுரம் ஜேசிஐ - ஜேகாம், எல்1 அமைப்பின் 50-வது வாரவிழாஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை ராசிபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் ஜேகாம் அமைப்பின் தலைவர் பி.பூபதி தலைமை வகித்தார். செயலர் டி.மோகன் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார். கூட்டத்தில் அவர் பேசியது: பல தொழில் முனைவோர்களை கொண்டு துவங்கப்பட்டுள்ள இந்த அமைப்பின் செயல்பாடுகள் மகிழ்ச்சியளிக்கூடியது. ஒரு தொழில் துவங்கி நடத்துவது என்பதே போராட்டம் தான். ஒரு தொழில்முனைவோருக்கு விடாமுயற்சி, உழைப்பு, ஈடுபாடு, போராட்ட குணம், பொறுமை போன்றவை இருந்தால் அத்துறையில் சாதிக்கலாம். எந்த தொழிலையும் நேசித்து நேர்மையாக செய்தால் அதில் உயரத்தை அடயைலாம்.

மேலும் தொழில்முனைவோர்களுக்கு உதவ அரசு பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. இதே போல் அரசு வங்கிகளிலும் மான்யத்துடன் கூடிய பல்வேறு கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. அதே போன்ற திட்டங்களை தொழில்முனைவோர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். கூட்டத்தில் ஜேசிஐ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிலாமணி கணேசன், ஜேசிஐ சாசனத் தலைவர் சசிரேகா சதீஸ்குமார், ஜேகாம் பொருளாளர் எம்.வி.சக்திகுமார், துணைத்தலைவர் கே.கார்த்திக், பயிற்சியாளர் எம்.தமிழரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News