தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழார்வலர்கள் ஆலோசனை கூட்டம்

குமாரபாளையத்தில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழார்வலர்கள் ஆலோசனை கூட்டம்

Update: 2024-03-06 08:15 GMT
ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழார்வலர்கள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி தமிழார்வலர்கள் சார்பில் குமாரபாளையதம் சி.பி.எம்.கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் வழக்கறிஞர் கார்த்தி தலைமையில் நடந்தது.

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி, சென்னை எழும்பூரில் வழக்குரைஞர்கள், தமிழார்வலர்கள் நடந்தும் போராட்டத்திற்கு ஆதரவாக, குமாரபாளையத்தில் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம் மார்ச் 9ல் நடத்துவதென இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தமிழார்வலர்கள், சமூக சேவையாளர்கள் சக்திவேல். ரவி, ஆறுமுகம் .கணேஷ்குமார், பன்னீர்செல்வம், பாண்டியன், சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News