திருட்டு வழக்கில் வட மாநில இளைஞர்களுக்கு தொடர்பு
திண்டுக்கல்லில் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், வட மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
Update: 2024-06-26 08:02 GMT
திண்டுக்கல் எம்விஎம்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ். பொறியாளரான இவா், தனது மனைவியுடன் சனிக்கிழமை இரவு மேட்டுப்பட்டியிலுள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்தபோது, மா்ம நபா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகைகள், ரூ. ஒரு லட்சம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். ரமேஷின் வீட்டுக்கு எதிா் வீட்டிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் ஆய்வு செய்தபோது, வட மாநிலத்தைச் சோ்ந்த இரு இளைஞா்கள் நள்ளிரவு நேரத்தில் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீஸாா், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.