துறைமுகத்தில் கண்டெய்னர் விழுந்து டிரைவர் உயிரிழப்பு!!
மீஞ்சூர் அருகே கண்டெய்னர் விழுந்ததில் கீழே லாரிக்குள் அமர்ந்திருந்த ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்..;
By : King 24x7 Desk
Update: 2024-07-13 09:42 GMT
Container falls
சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகத்தில் கிரேன் மூலம் மேலே தூக்கப்பட்ட கண்டெய்னர் விழுந்து கீழே லாரிக்குள் அமர்ந்திருந்த அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த நாகராஜ் என்ற லாரி ஓட்டுநர், கண்டெய்னரை கப்பலில் ஏற்றுவதற்காக சென்ற போது விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. கவனக்குறைவு, இரவு தூக்கமின்றி பணியாற்றுவது மற்றும் சரியான முறையில் கிரேனை இயக்கதது போன்ற காரணங்களால், இது போன்ற விபத்துகள் நடப்பதாகக் கூறி சக ஓட்டுநர்கள் துறைமுகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.