தோவாளையில் மலர் சந்தையில் விலை தொடர் சரிவு  !

தோவாளையில் மலர் சந்தையில் விலை தொடர் சரிவு விவசாயிகள்,வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2024-07-04 11:30 GMT
மலர் சந்தை

தமிழகத்தில் மலர் விற்பனைக்கு புகழ் பெற்று வழங்குவது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலச்சந்தையாகும். இங்கிருந்து திருவனந்தபுரம் உட்பட பல பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆகவே பூ வியாபாரத்தை நம்பி ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பூக்கட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். தற்போது தோவாளை மலச்சந்தையில் கடந்த இரண்டு வாரமாக பூக்கள் விலை தொடர்ந்து சரிவு நிலையை சந்தித்து வருகிறது. 

தற்போது கபமுகூர்த்த தினம் கோயில் திருவிழாக்கள் நடைபெறாத நிலையில் பூக்கள்  தேவையானது மிகவும் குறைந்து காணப்படுகிறது. அதே வேளையில் பூக்களின்  வருகை அதிகமாக உள்ளது. இதனால் பூக்கள் சந்தையில் தேங்கியுள்ளது. கொள்முதல் செய்ய வருகின்ற சில்லறை  மொத்த வியாபாரிகளின் வருகையும் குறைந்து காணப்படுகிறது.

இந்த காரணங்களால் பூக்களின் விலை மிகவும் சரிவுடன் காணப்படுகிறது. தற்போது மல்லிப்ப பூ கிலோ ரூ 250, பிச்சி ரூ. 250, முல்லை ரூ.  150, சம்பங்கி ரூ.  25, கனகாம்பரம் ரூ. 150, மஞ்சள் கிரேந்தி ரூ.  40,  கொழுந்து ரூ.  120, மரிக்கொழுந்து ரூ 120 , பாக்கெட் ரோஸ் ரூ. 10 பட்டன் ரோஸ் ரூ. 80 , துளசி ரூ. 20 என்று விற்பனை ஆகிறது.      இந்த நிலையில் தொடர்விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொடர் நஷ்டத்தில் இருந்து வருகின்றனர். இதனால் பூ விவசாயத்திற்கு செலவு செய்த தொகை கூட கிடைக்காத சூழல் எழுந்து உள்ளது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News