கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றம் : சுற்றுலா பயணிகளுக்கு தடை

கன்னியாகுமரியில் தொடர் கடல் சீற்றத்தால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் படகு சேவை துவங்கவும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-06-09 05:08 GMT

கன்னியாகுமரி (பைல் படம்)

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறை நாட்கள் இன்னும் ஒரு நாளில் முடிய உள்ள நிலையில் இங்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில்     இந்த நிலையில் கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் முக்கடல் சங்கமம் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிகவும் குறைந்து காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பெய்த மழை பெய்து கொண்டே இருந்ததால் குறைந்த அளவிலே சுற்றுலா பயணிகள் தென்பட்டனர். மேலும் கடலில் திடீரென நீர்மட்டம் தாழ்ந்ததால் காலை படகு சேவை ரத்து செய்யப்பட்டது. நீர்மட்டம் சகஜ நிலைக்கு வந்த பின்னரே மீண்டும் படகு சேவை தொடங்கப்பட்டது.  இந்த நிலையில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்றும் தொடர்கிறது .காலையில் சுற்றுலா  படகு சேவை தொடங்கப்படவில்லை.

Tags:    

Similar News