தொடர் மழை : பேச்சிபாறை அணையிலிருந்து 500 கன அடி நீர் வெளியேற்றம்
பேச்சிப்பாறை அணையிலிருந்து 500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.;
Update: 2024-05-19 06:47 GMT
பேச்சிபாறையில் நீர் வெளியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருவதுடன் ஒரு சில இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது மழை வர பகுதிகளில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காணப்பட்டது இந்த மழை காரணமாக பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளில் நீர் வரத்தும் அதிகரித்தது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பேச்சிப்பாறை அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்ற மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து இன்று 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தபட்டுள்ளது.