வேலூர் டூ சேலம்; மத்திய சிறைக்கு 33 தண்டனை கைதிகள் மாற்றம்

வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு 33 தண்டனை கைதிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2024-06-17 10:00 GMT

வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு 33 தண்டனை கைதிகள் மாற்றம் செய்யப்பட்டனர்.

வேலூர் மத்திய சிறையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய சிறையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் கடத்தல், விற்பனை; அடிதடி வழக்குகளில் கைதானவர்கள் மட்டுமே அடைக்கப்பட்டு வந்தனர். குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற கைதிகளை சேலம் சிறையில் அடைக்க அனுமதி இல்லை. அதனால் சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தண்டனை கைதிகளும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் வேலூர், புழல், கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட மத்திய சிறைகளை போன்று சேலம் மத்திய சிறையிலும் தண்டனை கைதிகளை அடைக்கலாம் என்று சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த சேலம், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சேர்ந்த 33 கைதிகள் சேலம் மத்திய சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என சிறைத் துறைக்கு கோரிக்கை வைத்திருந்த நிலையில் 33 தண்டனை கைதிகளையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News