குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை ரத்து
குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் பாறைகள் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - மேட்டுபாளையம் செல்லும் மலை இரயில் சேவை ரத்து தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-11-04 06:20 GMT
Rocks
ரைலிவாய் ற்றச்க்
ரயில் பாதையில் மண் சரிவு
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது போல தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலரிகி மாவட்டம் குன்னூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது.
இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை இரயில் பாதையில் கல்லாறு மற்றும் ஹில் குரோ பகுதியில் மரம் மற்றும் பாறைகள் சரிவு ஏற்பட்டுள்ளதால் உதகை - மேட்டுபாளையம் செல்லும் மலை இரயில் சேவை ரத்து தென்னக இரயில்வே அறிவித்துள்ளது.