₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் போனது - மல்லசமுத்திரம்
₹2 லட்சத்திற்கு கொப்பரை ஏலம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று நடைபெற்ற ஏலத்தில் 40 மூட்டை கொப்பரையை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் முதல்தரம் கிலோ ₹102.80 முதல் ₹130.10 வரையிலும், இரண்டாம் தரம் ₹93.20 முதல் ₹102.60 வரை ₹2 லட்சத்துக்கு விற்பனையானது.
சேலம், ஈரோடு, காங்கேயம், திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு, கொப்பரையை ஏலம் எடுத்தனர். அதே போல், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில், நேற்று நடைபெற்ற கொப்பரை ஏலத்தில் 25 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில், முதல் தரம் கிலோ ₹100 முதல் ₹130 வரையிலும், இரண்டாம் தரம் ₹88 முதல் ₹98 வரையும் விற்பனையானது.