பழனியில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் போலீசார்
பழனியில் இருந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 15:16 GMT

பழநி முருகன் கோயில்
பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதுமிருந்து 3500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழா முக்கிய நிகழ்வான தேரோட்டம் முடிந்தது. இன்று கொடியிறக்கத்துடன் நிறைவடைவதை ஒட்டி பழனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புகின்றனர்.