ஓசூரில் கொத்தமல்லி விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

ஓசூரில் கொத்தமல்லி விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-05-30 11:52 GMT

விற்பனைக்கு வந்த கொத்தமல்லி

ஓசூர் கொத்தமல்லி விலை உயர்வு-விவசாயிகள் மகிழ்ச்சி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதி விவசாயிகள் காய்கறிகள் பயியிரிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் பகுதி விவசாயிகள் ஏக்கர் கணக்கில் கொத்தமல்லி சாகுபடி செய்த நிலையில்,

சமிபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக கொத்தமல்லி பயிர்கள் சேதமடைந்தன. இதனால் கொத்தமல்லி வரத்து குறைந்து இதனால் சந்தைகளில் தற்போது விலை உயர்ந்து கட்டு ரூ. 80 முதல் ரூ. 100-வரை விற்பனை செய்யபடுகிறது. ஒசூர் சந்தையில் கொத்தமல்லி விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News