சோள கதிர்கள் தீயில் கருகி சேதம் !
அறுவடை தோட்டத்தில் சோளக்கதிர் எதிர்பாராத விதமாக தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது.
Update: 2024-03-13 07:18 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் தாலுக்கா வீரகனூர் அருகே லத்துவாடியை சேர்ந்தவர் அங்கமுத்து(40). இவர் வெள்ளையூர் செல்லும் சாலையில் குத்தகை நிலத்தில் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மக்காச்சோளம்அறுவடை தோட்டத்தில் சோளக்கதிர் களை குவித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் 3 மணி அளவில் அங்கமுத்து தோட்டத்தின் அருகேயுள்ள சுப்புராஜ் என்பவர், தனது தோட்டத்தில் கழிவுகளை தீ வைத்ததில் எதிர்பாராத விதமாக அங்கமுத்து அறுவடை செய்து குவித்து வைத்த சோளக்கதிர்கள் மீது தீ பட்டதில் மள மளவென பற்றி எரிந்தது.இதுகுறித்து சுப்புராஜ் கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில், சோள கதிர்கள் முழுமையாக தீயில் கருகி சேதமடைந்தது.