இரவு பிரச்சாரத்தில் மாநகராட்சி மேயர் தீவிரம்
திமுக திருநெல்வேலி நாடாளுமன்ற வேட்பாளரை ஆதரித்து மேயர் சரவணன் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.;
Update: 2024-04-07 05:58 GMT
இரவு பிரச்சாரத்தில் மாநகராட்சி மேயர் தீவிரம்
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவு திரட்டும் விதமாக நேற்று (ஏப்.6) இரவு பாளையங்கோட்டை பகுதியில் திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணன் பொதுமக்களை சந்தித்து திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கூறி கைச்சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.