கொங்கணாபுரத்தில் ரூ.13 லட்சத்திற்கு பருத்தி ஏலம்

கொங்கணாபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை கிளை சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ.13 லட்சத்திற்கு பருத்தி விற்பனையானது.;

Update: 2024-04-28 04:14 GMT

பருத்தி ஏலம்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளை செயல்பட்டு வருகிறது. சனிக்கிழமை நேற்று நடைப்பெற்ற பருத்தி டெண்டரில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் 45 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 650 பருத்தி மூட்டைகள் விவசாயிகளால் கொண்டவரப்பட்டு மொத்தம்  135 லாட்டுகளாக  வைத்து ஏலம் விடப்பட்டது.

Advertisement

BT ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 7669 முதல் அதிக பட்சமாக ரூபாய் 8099 வரையிலும், DCH ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 8300 முதல் அதிக பட்சமாக ரூபாய் 9799 வரையிலும் கொட்டு ரக பருத்தி ரூ 4650 முதல் ரூ 5400 விலை விற்று தீர்ந்து மொத்தம் ரூ13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடைப்பெற்றது. அடுத்த டெண்டர் 4.05.24 சனிக்கிழமை  நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News