ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 11/4 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.
திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரம் தோறும் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரத்துக்கான ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர்,திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 526 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
இந்த பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும் மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ. 8,292-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ. 6,450க்கும், சராசரி விலையாக ரூ. 7,400-க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 5,784 மூட்டைகள், குவிண்டால் 1957.77.இதன் மதிப்பு ரூ. 1 கோடியே 40 லட்சத்து 93 ஆயிரத்து 224.இந்த மறைமுக ஏலத்தில் 16 வியாபாரிகள் பங்கேற்றனர்.